வாக்குறுதியால் சிக்கல்..... அரசியலில் இருந்து விலகுகிறார் பிரசாந்த் கிஷோர்?

 


பிகார் மாநில சட்டமன்றத் தேர்தலில், தான் புதிதாகத் தொடங்கிய ‘ஜன சுராஜ்’ கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததாலும், முதலமைச்சர் நிதிஷ்குமார் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுவதாக முன்னர் கொடுத்திருந்த வாக்குறுதியாலும், அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு தி.மு.க.வின் வெற்றிக்குப் பின்னணியில் வியூகம் அமைத்து முக்கியப் பங்காற்றிய பிரசாந்த் கிஷோர், தனது சொந்த மாநிலத்திலேயே சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று, நிதிஷ்குமார் குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தாண்டிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தலில் ‘ஜன சுராஜ்’ இயக்கம் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றிருந்தாலும், ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாதது அவருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. முழுநேர அரசியல்வாதியாக மாற எடுத்த முயற்சிக்குச் சொந்த மண்ணிலேயே வரவேற்பு கிடைக்காத நிலையில், இந்தத் தோல்வியின் விளைவாக அவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி, மீண்டும் தேர்தல் வியூகப் பணிக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி அரசியல் விமர்சகர்களும் உற்றுநோக்கி வருகின்றனர்.

Post a Comment

0 Comments