பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சியில் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் திருத்தம் பணி தீவிரம்


தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சி பகுதியில், வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  எண்டப்புளி ஊராட்சியில்,  தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும்   திட்ட இயக்குனர்  அறிவுரையின்படி தேர்தல் குறித்து பாகம் வாரியாக கிராமம் மற்றும் தெருவாரியாக வீடுகளின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணி மற்றும் எஸ் ஐ ஆர் படிவங்களை பூர்த்தி செய்து உடன் சம்பந்தப்பட்ட உதவி மையங்களில் கொடுக்க பொது மக்களிடையே தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 இதனால், பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்று வருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள்து. இதேபோல், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ. ஊ), வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகியோரின் ஆலோசனையின் பேரில் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments