பெரியபாளையத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


திருவள்ளூர் வடக்கு மாவட்டம்,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக்கான ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.விஜயகுமார்  தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் வேதகிரி, துணைச் செயலாளர் காயத்ரி கோதண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வினோத்குமார் கலந்துகொண்டு நடைபெற இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பூத்கமிட்டி  நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும்,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. கே.பழனிச்சாமி மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக வருவதற்கு நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் மோகன், வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ்,முன்னாள் கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி,வடமதுரை கோதண்டன், முன்னாள் கவுன்சிலர் குமார், தேவம் பேடு உதயகுமார் அருள்.உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments