நாகை: மழை காரணமாக வல்லம் பிரதான சாலையில் தேங்கி சிறு குட்டை போல காட்சியளிக்கும் மழைநீர்

 


நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37.35 செமீ மழை  பதிவாகியுள்ள நிலையில் அதிகபட்சமாக கோடியக்க fcரையில்  11.7 செமீ  மழை பதிவு:கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் கருமேகங்களுடன் மந்தமான வானிலை நீடித்தது. இரவு தொடங்கி மாவட்டம் முழுவதும் இடைவிடாது பரவலாக மழை  பெய்தது. நாகை, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தேவூர், திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரணியம், கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 37.35 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதாவது நாகப்பட்டினம் – 3.17 செ.மீ,திருப்பூண்டி – 3.96 செ.மீ,வேளாங்கண்ணி – 3.42 செ.மீ,திருக்குவளை – 1.86 செ.மீ,தலைஞாயிறு – 6.14 செ.மீ,வேதாரண்யம் – 7.1 செ.மீ,கோடியக்கரை – 11.7 செ.மீ (அதிகபட்சம்) இன்றும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன் 

Post a Comment

0 Comments