பழவேற்காடு: சவத்தை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு படகில் ஏற்றி செல்லும் நிலை அறிந்து பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் ஆய்வு


திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த கோட்டைக்குப்பம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு சவத்தை அடக்கம் செய்வதற்கு செல்ல வழி இல்லாததால் படகில் ஏற்றி சென்று அடக்கம் செய்யும் நிலை இருந்து வருகிறது.இதனை அறிந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கோட்டைக்குப்பம் கிராமத்திற்கு சென்று அங்கு கிராம மக்களுடன் இது குறித்து கேட்டறிந்தார்.

 பின்னர் சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய பாதையை பார்வையிட்டு எவ்வாறு சாலையை புணரமைப்பது என்பது குறித்து ஆய்வு செய்தார்.அப்போது அந்த கிராமத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025 பணிகளை பார்வையிட்டார்.பின் கிராம நிர்வாகிகளுடன் சுடுகாட்டுக்கு சாலை அமைப்பது குறித்து ஆலோசனை செய்தார்.இதில் காங்கிரஸ்,திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments