தேனி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் அவசரப் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளுக்கு விரைந்து செயல்படவும் 8 அதிநவீன கூடுதல் நான்கு சக்கர 'விரைவுப் பதில் குழு' (Quick Reaction Team - QRT) வாகனங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா, கொடியசைத்துத் துவக்கி வைத்துள்ளார்.
இந்தச் சேவை, குற்றச் சம்பவங்களைத் தடுத்தல், பொதுமக்களின் புகார் அழைப்புகளுக்கு உடனடித் தீர்வு, சாலை விபத்துகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளுக்கு விரைந்து செல்லுதல் போன்ற முக்கிய நோக்கங்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆய்வாளர் சரவணன், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

0 Comments