ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள்.
அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள். இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து பொதுமக்கள் அறிவதற்கும், சிந்திக்கவும், ஆலோசிக்கவும் பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று தேசிய பத்திரிகை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தநிலையில், பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகை தின வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,
பத்திரிகைகள் ஜனநயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கபடலாம் அல்லது கைப்பற்றப்படலாம். பாஜக அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுக்கும் பத்திரிகையாளர்களை பாராட்டுகிறேன். பாஜக அரசின் தோல்வி, ஊழல்கள், வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு என் அதில் பதிவிட்டுள்ளார்.

0 Comments