திருக்குவளை அருகே வலிவலம் தொடக்கப்பள்ளியில் குழந்தை தின விழா


நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) தெ. ஐயப்பன் தலைமையில் நேரு அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, நேரு அவர்களின் வாழ்க்கை வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கும், குழந்தைகளின் நலனுக்காக அவர் செய்த பணிகளும் விரிவாக விளக்கப்பட்டன. “இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் சிற்பிகள்” என்ற அவரது கனவு குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

பள்ளியின் கலைத் திருவிழா நிகழ்ச்சியில், மாநில அளவிலான ஆங்கில ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட 2ஆம் வகுப்பு மாணவி மு. பவுசிகாவிற்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் புஷ்பா, தீபா, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், தன்னார்வ ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள்  பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன் 


Post a Comment

0 Comments