திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைப்போலவே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தமிழகம், புதுச்சேரியில் தனது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மற்ற பிரதான கட்சிகளில் இருந்து விலகும் முக்கியப் பிரமுகர்களைத் தவெக தனது பக்கம் ஈர்த்து வருகிறது.அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சாமிநாதன் மற்றும் காரைக்கால் பகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசனா ஆகிய இருவரும் இன்று தவெக-வில் இணைந்துள்ளனர்.
இரு முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் இணைப்பும் புதுச்சேரியில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.முன்னாள் எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன் மற்றும் அசனா ஆகிய இருவரும் தவெக-வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்தின் முயற்சியின் பேரிலேயே இவர்களின் இணைவு நிகழ்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த இவர்கள் இருவருக்கும் விரைவில் கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த இணைவின் மூலம், விஜய் தலைமையிலான தவெக, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் அரசியலில் வலுவான இடத்தை பெறத் திட்டமிட்டு வருவது தெளிவாகிறது.


0 Comments