ஆண்கள் முன்னிலையில் பெண்களுக்கு ஊசி..... அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையின் அவலம்.....

 


புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கியில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் அறந்தாங்கியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து புற மருத்துவ பயனாளிகள், உள் மருத்துவ பயனாகளிகள் என ஏராளமானோர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆண்கள் ஊசி போடுவதற்கும்,பெண்கள் ஊசி போடுவதற்கும் தனித் தனியாக இடம் இருக்கின்றன. 

பெண்கள் ஊசி போடும் பகுதியில் ஆண்களுக்கும் ஊசி போடும் போது 

அப்படி இருந்தும் கூட பெண்கள் ஊசி போடும் இடத்தில் தான் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் ஊசி போடுகின்றனர். ஆண்கள் முன்னிலையில் பெண்களுக்கு ஊசி போடுவதால் பெண் மருத்துவ பயனாளிகள் முகம்சுளித்து கொண்டே வேறு வழியின்றி ஊசி போட்டுக்கொள்கின்றனர். ஆண்கள் ஊசி போடும் இடம் காற்று வாங்கி கொண்டிருக்கிறது. மருத்துவ பயனாளிகளின் நலன் கருதி ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித்தனி இடத்திலேயே ஊசி போட வேண்டுமென மருத்துவ பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தலைமை மருத்துவமனையிலே இந்த நிலைமையா என வேதனையுடன் மருத்துவ பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

காற்று வாங்கும் ஆண்கள் ஊசி போடும் இடம்


Post a Comment

0 Comments