திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஜெகன்குமார் தலைமை தாங்கினார்.உதவி மேலாளர் ராஜேஷ், இணை இயக்குனர் உதவியாளர் மோகன்,பள்ளியின் முதல்வர் திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசோதனை மற்றும் அடையாள அட்டை வழங்குதல், செவிகேட்கும் திறன் அறிதல்,கருவி வழங்குதல்,இரத்த அழுத்த பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜன், இணை இயக்குனர் அம்பிகா ஆகியோர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு முகாமை பார்வையிட்டார். பின்னர் 20-க்கும் மேற்பட்டோருக்கு தூய்மை பணியாளர் வாரிய காப்பீடு அட்டையை வழங்கினார்.இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ். நகரச் செயலாளர் அறிவழகன்,சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கேசவன், உள்ளிட்ட பேரூர் கழக நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments