ஹேண்ட் பால் போட்டியில் திருக்குவளை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை

 


அண்ணா பல்கலைக்கழகம் மண்டலம் 15ல் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான ஹேண்ட்பால் போட்டியில் திருக்குவளை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது. 

அண்ணா பல்கலைக்கழக 15 வது மண்டல அளவிலான ஹேண்ட்பால் போட்டியினை புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரி நடத்தியது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 10ற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரியில் இருந்து அணிகள் கலந்து கொண்டன இதில் திருக்குவளை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணியினர் அரையிறுதி போட்டியில் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் எதிர்த்து 13க்கு 9 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் செங்கிப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரி  அணியிடம் 15க்கு 8 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். திருக்குவளை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணியினர் முதல்முறையாக மண்டல அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர என்பது குறிப்பிடத்தக்கது.

 இப்போ போட்டியில் முதலிடத்தை செங்கிப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரி அணியினரும்  மூன்றாம் இடத்தை பட்டுக்கோட்டை பல்கலைக்கழக பொறியியல் அணியினரும் நான்காம் இடத்தை புனல் குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரி எனும் பெற்றனர்.போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி  இரண்டாம் இடத்தை பிடித்த திருக்குவளை பொறியியல் கல்லூரி அணியின் வீரர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முனைவர் பி செல்வகுமார் அவர்களையும் அவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த திரு வினோத் திரு விஜய ராஜன் அவர்களையும் கல்லூரியின் புல முதல்வர் முனைவர் அ. கலைச்செல்வன் அவர்களும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு ஆர்.ஹரிஹரன் அவர்களும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments