வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நாளை முதல் SIR பணிகளைப் புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வி.ஏ.ஓ.க்கள், நில அளவர்கள், வட்டாட்சியர்கள் உட்பட அனைத்து வருவாய்த் துறையினரும் நாளை முதல் பணியைப் புறக்கணிக்க உள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை சார்ந்த அனைத்துப் பணிகளும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முன்னோட்டமாக, இன்று மாலை மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த பணிப் புறக்கணிப்புப் போராட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ஆவணப் பதிவுகள், சான்றிதழ்கள் வழங்குவது மற்றும் நிலம் தொடர்பான முக்கியப் பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கான சேவைகள் பெருமளவில் தடைபடும். இதனால், மாநில அரசுக்கு வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

0 Comments