குலசேகரப்பட்டி ஊராட்சியில் ரூ.15.50 லட்சத்தில் 184 தெரு விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரபட்டி ஊராட்சிக்குட்பட்ட செல்வவிநாயகர்புரம் வடக்கு, சமாதானபுரம், பாவூர்சத்திரம் - மேலப்பாவூர் சாலை, பி.டி.சி. நகர், விஸ்வநாததாஸ் நகர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 184 தெருவிளக்கு அமைக்கப்பட்டது.
இத்தெருவிளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) திருவளர்செல்வி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பழனியப்பா, சாமிராஜா, வார்டு உறுப்பினர் பால் கிருபாகரன், பிச்சையா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சௌந்தர் நன்றி கூறினார். தங்கள் கோரிக்கையை ஏற்று தெருவிளக்கு வசதி செய்து கொடுத்த ஊராட்சி நிர்வாகத்தினருக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

0 Comments