கன்னியாகுமரி அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து..... 40 பேர் காயம்

 


சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர். பஸ் இன்று காலை கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை அருகே சென்றுகொண்டிருந்தது.

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலைத்தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் 40 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments