தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு..... ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளி சாதனை


தமிழ் இலக்கிய திறனாய்வுத்தேர்வில் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில்  11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.   இத்தேர்வினை எழுதிய ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 4 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி நாகஜோதி 100க்கு 99 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். மேலும் மாணவி அமிர்தலட்சுமி, மாணவன் ரிஷிதரன் தலா 98 மதிப்பெண்களும், மாணவன் பிரவின்ராஜ் 97 மதி;ப்பெண்ணும் பெற்று தென்காசி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கு  மாதம் ரூ.1500 வீதம் 11, 12ம் வகுப்புகளுக்கு மொத்தம் ரு.36 ஆயிரம் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படும்.

இதனிடையே பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகி அருட்திரு அந்தோணி அ.குரூஸ் சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அந்தோணி அருள்பிரதீப்,  உதவி தலைமை ஆசிரியர்கள் சகாயராணி, சாந்தி, பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியை  கேத்தரின் கிறிஸ்டில்டா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடத்துடன் வென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments