கீழப்பாவூர் பகுதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

 


கீழப்பாவூர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலில் நேற்று மாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதே போல் கீழப்பாவூர் தமிழர் தெருவில் அமைந்துள்ள வேணுகோபாலகிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி காலையில் சுப்ர பாதம், கோ பூஜை, ஸயன சேவை, கும்பாபிசேகம், தீபாராதனையும், மாலையில் பரமபதவாசல் திறப்பு, சுவாமி புறப்பாடு, பஜனை, கோலாட்டம் நடைபெற்றது. இக்கோவிலில் வருகிற 11ந்தேதி ஆண்டாள் திருக்கல்யாணமும், 15ந்தேதி தைப்பொங்கல் விழாவும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரவிபட்டாச்சாரி செய்து வருகிறார்.

Post a Comment

0 Comments