19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இதனால் அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது உறுதியாகியுள்ளது.
மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க சென்னை உள்ளிட்ட பல்வேறு அணிகளும் திட்டமிட்டிருந்த நிலையில் மேக்ஸ்வெல் பெயரை பதிவு செய்யாதது அந்த அணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

0 Comments