வினைதீர்த்தநாடார்பட்டி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்க விலையில்லா சைக்கிள்களை பழனிநாடார் எம்.எல்,ஏ., திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி வினைதீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெ.கே.ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா, ஒன்றிய கவுன்சிலர் மேரிமாதவன், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதனசிங், பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி, கிளை செயலாளர் தங்கராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் ராணி நன்றி கூறினார்.

0 Comments