கீழப்பாவூரில் திமுக வாக்குச்சாவடி பிரசார கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார்.
கீழப்பாவூர் பேரூர் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரசார கலந்தாய்வு கூட்டம் கீழப்பாவூர் பேரூர் திமுக மன்றத்தில் நடைபெற்றது. பேரூர் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் முன்னிலை வகித்தார். நெல்லை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
இக்கூட்டத்தில் கீழப்பாவூர் வடக்கு ஒனற்pய பொறுப்பாளர் பொன்செல்வன், நிர்வாகிகள் தங்கச்சாமி, அன்பரசு, இளைய பெருமாள், சமுத்திரக்கனி, முருகன், ஒன்றிய பிரதிநிதி இரா.மலைச்சாமி வார்டு செயலாளர்கள் மதியழகன், சுப்பிரமணியன், மாடசாமி, தங்கேஸ்வரன், மாரியப்பன், பெரியசாமி, சுடர்ராஜ், பாக முகவர்கள் ஆசைதம்பி, இசக்கிமுத்து, குத்தாலிங்கம், அருள்சுப்பையா, சீனிப்பாண்டி,, பாக டிஜிட்டல் முகவர் விஜி, பாக உறுப்பினர்கள் சுப்பையா, முருகன், ராமசாமி, சேர்மக்கனி, பூங்குன்றன், பாக முகவர் இராமகிருஷ்ணன், பாலமுருகன், சுந்தர்ராஜ், முப்புடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments