ஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருக்குறள் சார்ந்த கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளின் இரண்டாம் கட்டமாக, திருக்குறள் விவாத மேடை நிகழ்ச்சி, கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்.தமிழ்த்துறைத்தலைவரும், திருக்குறள் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கா.காளிதாஸ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில்,திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் கருத்துகள் விவாதப் பொருளாக எடுத்தாளப்பெற்றது.கல்லூரி அனைத்துத் துறை மாணவ, மாணவியர் அணியாகப்பெற்று, சிறப்பான முறையில் விவாதக்கருத்துகளை முன் வைத்தனர். தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் ச.கணேஷ்குமார் விவாத மேடை நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.தமிழ்த்துறைப்பேராசிரியைகள் முனைவர் க.செல்வி,முனைவர் தெ.தேன்மொழி. திருமதி ரா.ராஜலட்சுமி ஆகியோர் நடுவர்களாகப்பணியாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.



0 Comments