அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வனத்துறை பாராட்டுச்சான்றிதழ்கள்

 


புதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு வனத்துறையின் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது. 

தமிழ்நாடு வனத்துறை,  புதுக்கோட்டை வனக்கோட்டம்,  அறந்தாங்கி வனச்சரகத்தின் சார்பில்,  கடந்த நடைபெற்ற பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் பங்கேற்ற, அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வனத்துறையின் சார்பில்   பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்கள் தலைமை தாங்கினார். 

அறந்தாங்கி வனச்சரக அலுவலர் து. மணி வெங்கடேஷ் அவர்கள் சார்பில்,   ஆவுடையார்கோவில் வனவர் ம.ஜெயராஜ்,அறந்தாங்கி வேட்டை தடுப்புக் காவலர் ஜே.மரிய சைமன்   ஆகியோர் கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களைப் பாராட்டி, சான்றிதழ்களை வழங்கி, கல்லூரி முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ச.ரமேஷ், மு.பழனித்துரை,  மற்றும் அலுவலகப் பணியாளர்கள்  உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments