சுந்தரபாண்டியபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நல்லாட்சி தினம் கொண்டாடப்பட்டது.
தென்காசி அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தில் மாவட்ட பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டையொட்டி நல்லாட்சி தினம் கொண்டாடப்பட்டது.
கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர்கள் மருது பாண்டியன், வரதராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் மாரியப்பன், தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments