குருவியைச் சுடுவது போல 13 பேரை சுட்டுக்கொன்ற போது நேரில் சென்று பார்த்தாரா.? எடப்பாடியை விளாசிய செங்கோட்டையன்

 


அதிமுக ஒரு ஊழல் கட்சி என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பகிரங்கமாகத் தாக்கியதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக நிர்வாகி செங்கோட்டையன் ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அதில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை குருவிகளைப் போல சுட்டுக் கொன்றபோதும், கோடநாட்டில் இரண்டு கொலைகள் நடந்தபோதும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்த்தாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இவ்வளவு கசப்பான சம்பவங்களை ஆட்சியில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு விஜய்யைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என அவர் விளாசியுள்ளார்.

Post a Comment

0 Comments