2026 தேர்தலில் நானும் என் மனைவி ராதிகாவும் போட்டியிட மாட்டோம்..... ஆனால் 5 சீட் கேட்பேன்..... சரத்குமார் அறிவிப்பு

 




வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர். சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் தேர்தலில் தமக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும், தமக்கு விருப்பமில்லாத நிலையில் தனது மனைவி ராதிகா சரத்குமாரும் இந்தத் தேர்தலில் களம் காண மாட்டார் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தாலும், தம்மோடு இணைந்து பயணிக்கும் கடின உழைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரப்போவதாக சரத்குமார் உறுதி அளித்துள்ளார்.கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, தகுதியுள்ள தனது கட்சியினருக்குக் குறைந்தபட்சம் 5 தொகுதிகளையாவது கேட்டுப் பெற்றுத் தருவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது சொந்தப் போட்டியைத் தவிர்த்துவிட்டு, கட்சித் தொண்டர்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றப் போவதாக அவர் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments