காளையார்கோவிலில் மாநில அளவிலான இளையோர் கோ-கோ போட்டி தொடக்கம்...... மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் 26 மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவர்கள் பங்கேற்பு......


தமிழ்நாடு விளையாட்டு கோ-கோ கழகம், மாஸ்டர்ஸ் விளையாட்டு கழகம், சிவகங்கை மாவட்ட கோ-கோ கழகம் மற்றும் ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான இளையோர் கோ-கோ போட்டியை நடத்துகின்றன.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட சீவூரணி பகுதியில் உள்ள ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்தப் போட்டியை இந்திய கோ-கோ கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு கோ-கோ கழகத்தின் நிர்வாகியுமான நெல்சன் சாமுவேல் தொடங்கி வைத்தார். 


தமிழகம் முழுவதிலிருந்தும் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 350 இளையோர் மாணவ-மாணவிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்களது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.முதல் போட்டியாக சிவகங்கை மற்றும் காஞ்சிபுரம் அணிகள் மோதியதில், சிவகங்கை அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிகளில் இறுதியாக வெற்றி பெறும் அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகள், பரிசுகள் மற்றும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மற்றும் வீரர்கள் தேசிய அளவிலான கோ-கோ போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Post a Comment

0 Comments