திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி M.K.V. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1986-1988 ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, ஜனவரி 26 திங்கட்கிழமை அன்று ஆரணி பிஞ்சலார் தெருவில் உள்ள சாந்திலால் பேலஸ் திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர், . G. D.பாஸ்கர் இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்திருந்தார்.தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள், ஒருவரையொருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்து, பள்ளிப் பருவ நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.மாணவர்களுக்குப் பாடம் கற்பித்த முன்னாள் ஆசிரியர்களான P.A. விரராகவன், ஓவிய ஆசிரியர் சந்தானம்,.K. K.சுப்பிரமணியம், சாரதா, கனகவல்லி உள்ளிட்டோருக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி மாணவர்கள் கௌரவித்தனர்.
முன்னாள் மாணவரும், தியாகராயா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான G. ரவிச்சந்திர பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். முன்னாள் மாணவர் வெங்கடேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
முன்னாள் மாணவர்கள் ஸ்ரீராம், பவானி ஆகியோர் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர் பெருமக்கள் P.A. வீரராகவன் மற்றும் சாரதா ஆகியோர் மாணவர்களின் வளர்ச்சியைக் கண்டு பாராட்டி, ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த விழாவில் வெங்கடேஸ்வரலு, சாம்ராஜ், அகிலன், அரவிந்தன், நாராயணன், ராஜகோபால், புருஷோத்தமன், ஹரி, மூர்த்தி, புவனேஸ்வரி, பிரேமலதா, விஜயலட்சுமி, இந்துமதி, V.O.C. பவானி, சுந்தரி, சரஸ்வதி, சுரேகா, சகிலா, ரோகிணி, ஜோதி ஜான்சி உள்ளிட்ட ஏராளமான முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் மேடையில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. விழாவின் நிறைவாக அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவி சரஸ்வதி நன்றி உரையாற்றினார்.





0 Comments