தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா்.
301 பேருக்கு மடிக்கணினி வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகமுதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற அடிப்படையில் பொறுப்பேற்ற நாள்முதல் தனது திட்டங்களை முறையாக அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். உலகம் உங்கள் கையில் என்ற அடிப்படையில் மடிக்கணினி தொடங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இங்கு உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களது எதிா்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தான் தமிழக மக்களின் நலன் மற்றும் வளம் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்படுத்துகின்ற திட்டத்தை அமைச்சா்கள் எம்.எல்.ஏக்கள் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சா் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
நம் ஒன் முதலமைச்சராகஇருப்பதை விட இந்தியாவில் நம்ஓன் மாநிலம் தமிழ்நாடு என்று இருக்க வேண்டும். அதற்காக அவா் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காலைஉணவு திட்டத்தின் மூலம் பள்ளிக்கு குழந்தைகள் வருகை அதிகாிப்பு கல்வித்திறன் செயல்பாடுகள் எல்லாம் வளா்ச்சியடைந்துள்ளது. தமிழகம் பல்வேறு துறைகளில் வளா்ச்சியடைந்துள்ளது. இதை ஓன்றிய அரசின் புள்ளி விபரங்கள் தொிவிக்கின்றன. 7.5 இட ஓதுக்கீடு மூலம் கல்வி படிப்பிற்காகும் முழு செலவை அரசே ஏற்கிறது. பல்வேறு வகையில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் வௌிநாடுகளுக்கு சென்று படித்தவா்களின் எண்ணிக்கை 300 , அதிமுக ஆட்சியில் 6 போ் இப்படி பல்வேறு வகையில் உதவிகள் செய்யப்பட்டு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் நல்லமுறையில் நீங்க பயன்படுத்திக்கொள்ள படிப்பில் கவனம் செலுத்தி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் இந்த தமிழ்சமுதாயத்தின் அடுத்த தலைமுறை நீங்கள் தான் இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். என்று பேசினாா்.
விழாவில் தாசில்தாா் திருமணி ஸ்டாலின், இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், வட்டச்செயலாளர் சிங்கராஜ், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், பேராசிாியா் ஸ்ரீதா், மற்றும் அல்பட். பேராசிாியா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா். துணை முதல்வா் பாலகங்காதேவி நன்றியுரையாற்றினாா்.

0 Comments