திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்த தினத்தையொட்டி கடையம் ஒன்றியத்தில் 7 அங்கன்வாடிகளுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான உபகரணங்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யின் பிறந்த தினத்தையொட்டி, கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜீனத் பீவி யாகூப், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, வீராசமுத்திரம், மாலிக் நகர், மந்தியூர் ,வாகைக்குளம், ராஜாங்கபுரம், பிள்ளைகுளம், கோவிந்த பேரி ஆகிய பகுதிகளில் உள்ள 7 அங்கன்வாடிகளுக்கு பீரோ, மின் விசிறி, சேர், பாய், கடிகாரம் ,டிராயிங் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார். மேலும் குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சங்கர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட், மாவட்ட பிரதிநிதிகள் அய்யன் சாமி, துரைப்பாண்டியன், முகம்மது யாகூப், பெருமாள் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், வெள்ளப் பாண்டியன், கிளைச்செயலாளர்கள் அகமது ஈசாக், அப்துல் சமது, பெருமாள், காதர் ராஜன், நடராஜன், மூக்கையா, நாகராஜன், முத்தையா தேவர் துரைப்பாண்டி, இசக்கி, பாண்டி, ராமசாமி, இளங்கோ, வெள்ள பாண்டியன், சங்கரன், சுந்தரம்,ஆரிப் பாண்டியன், விடியல் ஆர்த்தி, ராஜபாண்டியன், அட்மா சேர்மன் குணசீலன், இளங்கோ, அகம் முருகேசன், ஜாகிர் உசேன், சிவசக்தி,ஏ.பி. என். குணா, காசி பாண்டியன், ஆரிப் முகமது கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



0 Comments