தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 80 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய கனிமொழி எம்.பி


தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில்  'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, 80 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments