சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், புதுவயல் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பட்ட வார்டு எண்கள் 13,14 பகுதிகளில் காமராஜர் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் தூய்மை நிறைந்த பகுதிகளாக இருந்து வந்ததாகவும், இதனால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்ததாகவும், கூறும் அப்பகுதி மக்கள், தற்போது மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ தகுதியற்ற பகுதியாக உருவாக்கிய பெருமை பேரூராட்சி நிர்வாகத்துக்கே சாரும் என குற்றம் சுமத்தும் அப்பகுதிமக்கள், தற்போது பாதாள சாக்கடை திட்டம் என்கின்ற பெயரில், அருகில் இருக்கும் கிராம ஊராட்சிகளுக்கு செல்லும் நீர் வழி கால்வாய்களில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதிலும் குறைபாடுகள் நிறைந்த வேலைகள் கிடைப்பில் போடப்பட்டுள்ளதாலும், கழிவுநீர் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகவும், கழிவு நீரால் கொசு மற்றும் விஷ வண்டுகளால் தொற்று நோய்க்கு ஆளாகி வருவதாகவும் , உயிர் பயத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கும் அவர்கள், அங்கு வசிக்கும் ஒரு நபர் கூறும் போது, ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதியில் வசித்து வருவதாகவும், தனது வீட்டிற்கும் முன்பு செல்லும் பிரதான சாலையின் முன்புறம் தோண்டப்பட்ட கழிவுநீர் செல்லும் கால்வாய் கிடைப்பில் போடப்பட்டுள்ளதாலும் , எப்போது வேண்டுமானாலும் தங்கள் உயிர் போய்விடலாம் என்ற அச்சத்திலேயே வீட்டை காலி செய்து வாடகை வீட்டில் குடி ஏறி விட்டதாகவும் கதறும் நபர் இதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார், இதுபோன்று அங்கே நின்ற மற்றொருவர் கூறும் போது, இதை உடனடியாக சரி செய்யவில்லை என்றால், ஊரை காலி செய்து விட்டு, எங்களின் அரசு ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இவைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறப் போவதாகவும் தெரிவித்த அவர்கள், வரும் சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக தெரிவிக்கின்றனர். இது எவ்வாறு இருந்தாலும் அப்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறி இருப்பது நமக்கும் தெரிந்தது, மாவட்ட ஆட்சியர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாமும் கோரிக்கை விடுக்கின்றோம்.

0 Comments