லாட்ஜில் உடை மாற்றிய பெண்..... செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது.....

 


மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் உள்ள தங்களது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் (Lodge) அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.கடந்த 28-ம் தேதி, மதுரையைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் குளித்துவிட்டு அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் மறைந்திருந்து தனது செல்போன் மூலம் அந்தப் பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். 

இதைக் கவனித்துவிட்ட அந்தப் பெண் அதிர்ச்சியில் சத்தம் போட்டுள்ளார்.பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த உறவினர்கள் ஓடிவந்துள்ளனர். மாட்டிக்கொள்வோம் என்று பயந்த அந்த நபர், அந்தப் பெண் மற்றும் அவரது உறவினர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தப்பியோடிய நபர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி (40) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரைப் போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments