சூடு பிடிக்கும் அரசியல் களம்..... தேர்தல் பிரச்சாரத்தில் முந்துகிறதா அமமுக.?




தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில் இன்னும் உடன்பாடுகள் எட்டப்படாத நிலையில் , சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறதா? என்ற கேள்வி வாக்காளர் மத்தியில் எழுந்து நிற்கிறது, இதற்கான காரணம் என்ன என நமக்கு என்ன தோன்றுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி கூட அரசியல் பிரச்சார பயணத்தில் ஈடுபடாத நிலையில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் பிரச்சாரத்தில் முந்தி நிற்கிறது.

தேர்போகி V.பாண்டி

பார்க்கும் இடமெல்லாம் சுவர் விளம்பரம் காட்சியளிக்கிறது, இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முந்துகிறதா? எனவும் பொதுமக்கள் மத்தியில் கேள்வியும் எழுந்து நிற்கிறது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சிகளோடு தேர்தல் களத்தை சந்திக்கிறதா? அல்லது தனித்து சந்திக்கிறதா? எனவும் கேள்வி எழுகிறது, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசிய  வரும் நிலையில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியை கூட்டணி கட்சிகளிடமிருந்து பெற்றுவிட்டதா? என ஐயமும் எழுகிறது இவ்வாறு ஒருபுறம் இருக்க சற்றும் சலைக்காமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னோடியாக நிற்கிறது, இதனால் காரைக்குடி தொகுதியை தனித்து சந்திக்கிறதா? கூட்டணி கட்சிகளோடு பேசி காரைக்குடி தொகுதியை பெற்று விட்டதா? என்பதை வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது, பிரச்சாரத்தில் முந்துவது போல், களத்தில் முந்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என சில வாக்காளர்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.




Post a Comment

0 Comments