தென்காசி: கீழகரும்புளியூத்து கிராமத்தில் தவெக சார்பில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது



கீழகரும்புளியூத்து கிராமத்தில் த.வெ.க சார்பில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் த.வெ.க மாவட்ட இளைஞரணி செயலாளர் அலெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் கிராம மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதன் படி நேற்று ஆலங்குளம் அருகில் உள்ள கீழகரும்புளியூத்து கிராமத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது,

அப்போது அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும், 4 வழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும், மாறாந்தை மற்றும் சிவலார்குளம் ஆகிய இரு பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய தங்கள் கிராமம் உள்ளதால் அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் ஒரே ஊராட்சியாக மாற்றிட வேண்டும். வீட்டு மனை பட்டா வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவினை வழங்கினர்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட த.வெ.க மாவட்ட இளைஞரணி செயலாளர் அலெக்ஸ் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் த.வெ.க நிர்வாகிகள் மாரியப்பன், நாஞ்சில், சந்துரு, பால்ராஜ், பழனிவேல்ராஜா, அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments