திருப்பத்தூரில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..... ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று போட்டியினை கண்டுகளிப்பு.......

 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கள்ளர் உறவின்முறையினர்களால் நடத்தப்படும்  1ஆம் ஆண்டு மாபெரும்  எல்கை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்- சிவகங்கை தேசிய சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் நடுமாடு, சிறியமாடு, என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற நடுமாடு பிரிவில்  12 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 23 ஜோடிகள் என மொத்தம் 35 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடுகளுக்கான எல்கையாக 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர்.

 விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி  போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும்  கேப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி போட்டியினைகாண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாலையின் இருபுறங்களில் நின்று  ரசித்ததோடு, சாரதிகளை உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.

Post a Comment

0 Comments