தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் குருபூஜை...... அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.....


தமிழ் தேசிய முதன்மை போராளி தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் 14ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் கலந்து கொள்ள அவரது மகளும், மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சந்தனபிரியா நேரில் அழைப்பிதழ் வழங்கி இருந்தார்.

 இந்நிலையில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க தூத்துக்குடி அலங்காரதட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ, எஸ்.பி சண்முகநாதன், வி.எம்.ராஜலட்சுமி, சி.த செல்லப்பாண்டியன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, கழக அமைப்பு செயலாளர் என்.சின்னதுரை, ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments