தமிழர்களின் வீர விளையாட்டாகவும், பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதிக வாடிவாசல்களை கொண்டது மட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டு காளைகளும், காளையர்களும் அதிகமுள்ள மாவட்டமாகவும் திகழ்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் (2026) முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறுகிறது. தச்சங்குறிச்சி புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி விழாக்குழுவினர் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.
அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் கலெக்டர் அருணா ஆகியோர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் 900 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments