விசிகவில் இணைந்த ஜான் பாண்டியனின் தம்பி

 


தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (தமமுக) தலைவரும், அதிமுக தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணியின் முக்கிய அங்கமுமான ஜான் பாண்டியனின் சொந்தத் தம்பி விஜயகுமார், நேற்று (ஜன. 26) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (விசிக) இணைந்தார்.

சென்னையில் உள்ள விசிக தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்த விஜயகுமார், அவருடன் தனது ஆதரவாளர்கள் பலரையும் அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். ஜான் பாண்டியன் பாஜக மற்றும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவில் அவரது உடன்பிறந்த சகோதரரே இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் தீவிரமடைந்து வரும் சூழலில், ஜான் பாண்டியனின் குடும்பத்திற்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் தென் மாவட்டத் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments