சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு திருவிழா என்ற இது நம்ம ஆட்டம் என்ற விளையாட்டு போட்டி இன்று துவங்கியது. திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். கபடி, கயிறு இழுத்தல், வாலிபால், தடகளம், கைபந்து, கிரிக்கெட், உள்ளிட்ட போட்டிகள் வட்டார அளவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000, இரண்டாவது பரிசாக ரூபாய் 2000, மூன்றாவது பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். 12 வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பெரும் தனி நபர்கள் மற்றும் அணிகள் மாவட்ட அளவில் பங்குபெறும் போட்டிகளில் கலந்து கொள்வர்.
இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கிரிக்கெட் விளையாடி போட்டியினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், மாநில அளவில் 388 வட்டாரங்களிலும் இந்த போட்டி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இரட்டை எஞ்சின் என்பது அவருடைய கருத்து தமிழ்நாட்டில் ஒத்த இன்ஜினிலேயே தமிழ்நாடு நல்ல வேகமாத்தான் கொண்டிருக்கிறது. டிடிவி எடப்பாடி யார் சந்திப்பு என்பது கேட்டபோது ஏதாவது தூக்கு கயிறில் போய் அவர் தொங்கிற போகிறார் அதை பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

0 Comments