மீனவர் மக்களுக்கு பல்வேறு நலதிட்டங்களை செய்து வருகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..... மீனவ நல வாரிய தலைவர் முனைவர் ஜோசப் ஸ்டாலின் பேச்சு.....


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த.பழவேற்காட்டில் தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.சென்னை மண்டல மீனவ நல வாரிய உறுப்பினர்கள் கணேஷ் மற்றும் பொன்னரசு  ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்யில் மரணம் மற்றும் இயற்கை விபத்து மரணத்திற்கான உதவித்தொகைக்கான செயல்முறை ஆணை வழங்குதல் சம்மந்தமாக தோணிரேவு கிராமத்தைச் சேர்ந்த நைனியப்பன் என்பவரது மகன் ராஜ்குமார் விபத்தில் இருந்ததற்காக 2 லட்சம் ரூபாயும்,பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த குமார்,குட்டியம்மாள்,சந்திரன் ஆகியோர் இயற்கை மரணம் அடைந்ததற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் என மூன்று நபர்களுக்கு 75 ஆயிரம் ரூபாயும் மொத்தத் தொகையாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் இருந்து  இறந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் பழவேற்காடு மீனவ பகுதியை சேர்ந்த 100 பேருக்கு 100 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் தான் பல்வேறு நலத்திட்டங்கள் மீனவ மக்களுக்காக செய்து கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். என மீனவ மக்களிடம் உரையாற்றினார் பின் நலத்திட்டங்களை வழங்கினார்தமிழ்நாடு மீனவர் நலவாரிய தலைவர் முனைவர்.அ.ஜோசப் ஸ்டாலின்  வழங்கினார்.

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்,திருவள்ளூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அஜய் ஆனந்த்,ஆய்வாளர் பாரதிராஜா,சார் ஆய்வாளர் லட்சுமி பிரியா மற்றும் சாகர் மித்ரா பணியாளர்கள் மீஞ்சூர் வடக்கு. ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன். ஆரம்பாக்கம் மீனவரணி அமைப்பாளர்.ஆறுமுகம்.மீனவ கிராம நிர்வாகிகள் பயனாளிகள் இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments