காரைக்குடி: கல்லூரி சாலை ஓரங்களில் இருக்கும் பழமை வாய்ந்த மரங்களை சூறையாடும் நெடுஞ்சாலைத்துறையினர்...... கேள்வி எழுப்பினால், உயிர்நீர்த்த மரங்களை வெட்டுவதாக கூறும் அவலம் ......


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் இரு புறங்களிலும் பழமை வாய்ந்த மரங்கள் நிழல் தந்து, மழை தந்து, பசுமையும் தந்து அடையாளமாய் தழைத்து நிற்கிறது, இதனை சில நபர்களின் சுயநலத்திற்காக அழிக்கும் லாபம் நோக்கில் ஈடுபட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது, இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் ஒருவரிடம் கேட்டபோது, நாங்கள் உயிர்நீர்த்த மரங்களையும் மட்டுமே விடுகிறோம், உயிர் மரங்களை வெட்டவில்லை என தெரிவித்தார்.

 எவ்வளவோ இடங்களில் பட்ட மரங்கள் இருந்தும் அதை வெட்டுவதை தவிர்த்து விட்டு, குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உள்ள மரங்களை வெட்டுவது ஏன் எனவும், வெட்டுவதற்கு நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் இல்லாமல், தனி நபர்களிடம் கொடுத்து இவ்வளவு அவசரமாக வெட்ட வேண்டிய நிலை என்ன என கேள்வி எழுப்பிய போது, நமட்டு சிரிப்பு சிரித்துச் சென்றார், அங்கு நின்ற சாலைவாசிகள், சிலரின் சுயநலத்திற்காக மரங்களை வெட்டி வருவதாகவும், இதற்கு நெடுஞ்சாலை துறையும் துணை நின்று இயற்கை வளங்களை அழித்து வருகிறது என்றும் இவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் கருத்து தெரிவித்து வருத்தத்துடன் சென்றனர்.



Post a Comment

0 Comments