தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் கூட்டணி முடிவை அறிவித்த நிலையில் இன்னும் தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் பாமக கட்சியில் ராமதாஸ் மட்டுமே கூட்டணி குறித்து அறிவிப்புகளை வெளியிடவில்லை. அதன் பிறகு ஓபிஎஸ் தை மாதம் முடிவிற்குள் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் ராமதாஸ் சமீபகாலமாக திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் நிலையில் அன்புமணி அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்ததால் அதன் எதிரொலியாக அவர் அந்த கூட்டணியில் சேரலாம் என்று கூறப்படுகிறது.அதாவது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அன்புமணியுடன் கூட்டணி வைத்தது சட்ட விரோதம் எனவும் கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால் நீங்கள் தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது.அதற்கு திருமாவளவன் கடந்த 2011 ஆம் ஆண்டு பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பாமக உடன் கூட்டணியில் வைக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். ராமதாசை கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமை தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர நான் முடிவெடுக்க முடியாது என்றார். மேலும் இதன் காரணமாக திமுக கூட்டணியில் ஒருவேளை பாமக இணைந்தால் விசிக விலகிவிடுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments