பாவூர்சத்திரம் புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். துணை சேர்மன் முத்துகுமார், ஊராட்சி தலைவர் சுபா சக்தி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், பழனிநாடார் எம்.எல்.ஏ. பங்கேற்று 171 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினர். இதில் ஒன்றிய திமுக பொறுப்பாளர் ரமேஷ், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், சுரண்டை நகர பொறுப்பாளர் கணேசன், மாவட்ட திமுக பிரதிநிதி சமுத்திரபாண்டியன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாரிமுத்து, உதயசூரியன், ஜேம்ஸ், கிருஷ்ணமூர்த்தி, சரவணன், சண்முகசெல்வன், காசிமணி, நீலகண்டன், முருகன், வேலுச்சாமி, பேச்சிபாண்டியன், தமிழ்செல்வன், வேலு மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் செண்பகராமன் நன்றி கூறினார்.

0 Comments