செங்கல்பட்டு: கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ சின்னப்பா அறக்கட்டளை மற்றும் மகளிர் குழு இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா


 செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ சின்னப்பா அறக்கட்டளை மற்றும் மகளிர் குழு இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா 11.01.2026 அன்று, கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

  இந்த நிகழ்வில், மகளிர் சுய உதவிக் குழுவினர் பூங்கா முழுவதும் கோலமிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து உறியடிப்போட்டி நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு உறியடித்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இளம் சிறார்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டில் கலந்து கொண்டனர்.

 போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவில், கலந்து கொண்ட அனைவருக்கும் சைவ பிரியாணி வழங்கப்பட்டது. விழாவில், வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக, பகுதி கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக-வினர் திரளாக கலந்து கொண்டனர். 

 விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லயன். கீதா மணிமாறன், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் மற்றும் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வழக்கறிஞர் லயன் சி.மணிமாறன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர் M.குமார்

Post a Comment

0 Comments