திருப்பத்தூர்: திமுக அரசாங்க முடிவிற்கு மூன்றே மூன்று அம்மாவாசைதான் உள்ளது..... எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேச்சு......


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினர்.

 நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசுகையில், எம்ஜிஆரின் பெயரை சொல்லித்தான் எல்லோரும் கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அண்ணா திமுகவிற்கு தான் அந்த உரிமை இருக்கிறது. ஸ்டாலினை எம்ஜிஆர் பாடலைதான் கேட்பேன் என்கின்றார் அப்படிப்பட்ட அரசியலை இன்று வரை எம்.ஜி.ஆர் உருவாக்கி வைத்துள்ளார். குப்பைக்கு வரி போட்ட அரசாங்கம் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம்தான். மக்களை வஞ்சிக்கின்ற இந்த அரசாங்கம் எதற்காக என்றார். டாஸ்மாக் மூடுவேன் என கூறினார். இந்த பொங்கலுக்கு மட்டும் 518 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்று உள்ளது. மாணவர்க்கு வழங்கும் ஒரு லேப்டாப்புக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்கிறார். இன்னும் இந்த அரசாங்கத்திற்கு மூன்றே மூன்று அம்மாவாசை தான் பின்பு முடிவுக்கு வந்துவிடும் என பேசினார்.

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், எம்ஜிஆரால் தீய சக்தி என்று அடையாளம் காணப்பட்டு அதிமுக தொண்டரால் அழிக்க துடித்துக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கூட புரட்சித்தலைவரின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தால்தான் பிழைக்க முடியும். திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பனுக்கு காலம் குன்றி போய்விட்டது என்றார். பொதுவாக அனைத்து அரசு மற்றும் தனியா விழாக்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பெரியகருப்பன் வருவதில்லை என்ற விமர்சனம் எழுந்து வந்த நிலையில், வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாள் விழாவில் காலை 10 மணிக்கு கலந்து கொள்வதற்காக வருகை தருவதாக சொல்லிவிட்டு மாலை 5 மணிக்கு வந்தார்.

 அனைத்து நிகழ்ச்சிகளிலும் வேண்டுமென்று கால தாமதமாக வந்து அத்தனை பேரையும் காக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்களை அடிக்க செல்கிறார் என்ன குற்றம் சாட்டினார். கடைசி வரை எடப்பாடியார் தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஒரு பவுன் நகையை தூக்கிக் கொடுத்தார். ஒரு பவுன் இன்று ஒரு லட்சம் ரூபாய் அந்த திட்டத்தை ஸ்டாலின் அரசு தூக்கி எறிந்தது, இந்த அரசு தற்பொழுது தூக்கி எறியப்பட வேண்டும். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றதாக கொக்கரத்திக் கொண்டிருக்கும் மக்கள் விரோதி பெரியகருப்பனை தூக்கி எறிய வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உமாதேவன், ராஜேந்திரன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments