சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு, அக்கட்சியினர் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு கொடுத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் பதவியை அண்மையில் அறிவிப்பு செய்தார். கட்சியின் வளர்ச்சியில் தீவிரம் காட்டும் விதமாக இந்த அறிவிப்பு இருப்பதாக, அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் உரத்தூர் செ.ராமச்சந்திரன் என்பவரை திருமாவளவன் அறிவித்திருந்தார். அதற்கான அறிமுக கூட்டம் இன்று திருப்பத்தூர் தனியார் மகாலில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் மல்லை மலைச்சாமி, தலைமையில், மண்டல செயலாளர் பெரியசாமி, மண்டல துணை செயலாளர் சங்கு உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முன்னதாக திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே ஒன்று கூடிய விசிகவினர், மாவட்ட செயலாளருக்கு மலர் மாலை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் செ.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின்பு வீரவணக்கம் முழக்கம் எழுப்பிய விசிகவினர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க மதுரை ரோடு வழியாக நடை பயணமாக அருகில் உள்ள தனியார் மகாலுக்கு வருகை தந்தனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிமுக கூட்டம் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளருக்கு கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு செய்தனர். இக்கூட்டத்திற்கு மாநில துணைச் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வில்லவன் கோதை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பு செய்தார். நிகழ்ச்சியில் பஞ்சமி நில மீட்புக் குழு மாநில துணைச் செயலாளர் தளக்காவூர் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து திருமயம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் திலீபன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை நிர்வாகி கந்தசாமி, மாநில தொண்டரணி துணைச் செயலாளர் அருள்தாஸ், காட்சி ஊடக மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன் உட்பட ஏராளமானோர் வாழ்த்துரை வழங்கினர். பின்பு மாவட்டச் செயலாளரின் ஏற்புரை நடைபெற்றது. அப்போது 10 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சின்னத்துரை, சிவதிருப்பதி, செந்தில், மல்லை சந்திரன், செல்லப்பாண்டி, பழனிச்சாமி, இரும்புறை, சிங்கம்புணரி இஸ்லாமிய ஜனநாயக பேரவை நகர அமைப்பாளர் மக்கா அப்பாஸ், மருதங்குடி போஸ், கந்தசாமி முன்னாள் சுண்ணாம்பிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அச.மூர்த்தி, கனகுரவி, தம்பி ஆறுமுகம், வீரபாண்டி, கோட்டை ஆறுமுகம், காட்டாம்பூர், பழனி, நகர செயலாளர்கள் காளிதாஸ், அமுதன், மலைவேந்தன், விஜயா, காதர் பீவி, சரினா பேகம், சரினா பானு, மலர், அஞ்சலி உள்ளிட்ட மகளிரணி உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் விசிக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேஷ்கண்ணா நன்றி உரையாற்றினார்.

0 Comments