சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்டது வீரசேகரபுரம் ஊராட்சி, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கருநாவல்குடி பகுதியில் அறந்தாங்கி செல்லும் சாலையில் ஓரத்தில், பெத்தாச்சி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனாள் என்பவருக்கு சொந்தமான பட்டா இடம் இருந்து வருகிறது.இந்த இடத்தின் அருகிலேயே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமும் இருந்து வருகிறது. மீனாள் என்பவருக்கு சொந்தமான இடம் முக்கோண வடிவமாக இருந்தும் நிலையில் , சதுர வடிவில் முள்வேலி அடைக்கப்பட்டுள்ளது, இதில் அரசுக்குச் சொந்தமான இடமும் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இருந்த மரங்களை வெட்டியதாகவும்,, அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் என்பவர் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா அவர்களுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், மேற்படி இடத்திற்கு சாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு), கிராம உதவியாளர் வந்தனர், சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர், மீனாள் அவர்களின் கணவரிடம் இந்த இடம் தொடர்பாக அளவீடு செய்து , உங்களுக்கான பட்டா இடமாக இருந்தால் மரங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அரசுக்குச் சொந்தமான இடம் என்றால் உங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை மரங்களை அப்புறப்படுத்த கூடாது என்றும், அவற்றிற்கு நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.இதை ஏற்றுக் கொண்ட பின்னர் மீனாள் என்பவரின் கணவர் சென்ற நிலையில், வருவாய்த் துறையினர் நம்மிடம் தெரிவிக்கும்போது, வருகின்ற செவ்வாய் கிழமை சென்று இடங்களை அளவீடு செய்து , இது யாருக்கு சொந்தமான இடம் என்று ஆய்வு செய்த பின்னர், இது அரசுக்கு சொந்தமான இடம் என தெரியும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.


0 Comments