ரிப்பன் கட்டிட வளாகத்தில் உணவகத்தினை திறந்து வைத்தார் மேயர் பிரியா

 


பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டேன் டீ உணவகத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று (30.01.2026) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில், ராஜா முத்தையா சாலை பக்கம், 1700 ச.அ. பரப்பளவில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் சார்பில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உணவருந்துவதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், டேன் டீ மேலாண் இயக்குநர் அருண்லால், பொது மேலாளர் தருண்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments