கண்மாய் மடைகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் , பத்தாண்டுகளாக விவசாயம் செய்ய முடியவில்லை..... மனு கொடுத்தும் பலனில்லை..... ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்கள்......

 


சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சாக்கவயல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் குளப்படி என்ற பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இங்கு இருக்கக்கூடிய குளப்படி கண்மாய், சாணர் கண்மாய் இந்த இந்த இரண்டு கண்மாய்களின் வழியே பண்ணடுங்காலம் விவசாயம் செய்து வந்ததாகவும், இந்தக் கண்மாய்கள் தூர்வாரப்படாமலும், மடைகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும், இதனால் எங்களின் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், உங்களுடன் முதல்வர் என்ற முகாம்களிலும் மனு கொடுத்ததாகவும் ஆனால் இதுவரை எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து, இன்று சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் என மனு அளிக்க வந்திருந்தனர்.

மனு அளிக்க வந்திருந்தபோது, பத்திரிகையாளர்களிடம் தாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்வதாகவும், மற்ற பகுதிகளில் விவசாயிகள் விவசாயம் செய்து வருவதாகவும், பத்தாண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதியில் இருக்கும் குளப்படி கண்மாய், சானார் கண்மாய் இவைகள் இரண்டும் பராமரிப்பு இல்லாமல், நீர் வரத்து மடைகள், உடைந்து சிதலைமடைந்து உள்ளதாகவும், இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள், பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோரிடம் மனு மற்றும் முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என கூறும் விவசாயிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எங்களின் வாழ்வாதாரம் சிறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்த நிலையில், இவற்றில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோறு சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து, சங்கத்தின் பொறுப்பாளர்கள் சிதம்பரம், குமார், மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து மாணிக்கம் என்பவரும் கலந்து கொண்டனர், இந்தப் இந்த நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இதில் மாணிக்கம் என்பவர் கூறும் போது, நாங்கள் அரசிடம் எந்தவிதமான உதவியும் கோரவில்லை என்றும், எங்களின் உயிர் வாழ்வாதாரமான விவசாயத்திற்கு உண்டான கண்மாய், மடைகளை மேம்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததோடு, இதற்கு அரசு அலுவலர்கள் செவி சாய்க்காத நிலை ஏற்பட்டால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோறு சமைத்து அங்கேயே தங்கும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments