சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியில் உள்ள மண்ணின் மைந்தர்கள் மற்றும் தென்னரசு கால்பந்து கழகம் சார்பில் இன்று தென்னரசு கால்பந்து மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு, பசுமை கிரெடிட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மண்ணின் மைந்தர்கள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் ராம்குமார் ஒருங்கிணைத்திருந்தார்,இதில் கலந்துகொண்டு பேசிய மருத்துவர் குமரேசன், இந்த நிகழ்விற்கு நான் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டது எதனால் எதனால் என விளக்குவது எனது கடமை, காலையில் மாரடைப்பு வருவதற்கு ஏற்பட்டது.
அதற்கு சிகிச்சை அளித்துவிட்டு வர கால தாமதம் ஆகிவிட்டது, இன்று வயதில் சிறியோர் முதல் பெரியோர் வரை உள்ளவர்களுக்கு எளிதாக மாரடைப்பு ஏற்படுவது எதனால் என்றால் இயற்கையை நாம் அழித்து வருவதால், நாம் சுவாசிக்கக் கூடிய காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உருவாக்கும் மரங்களை அழித்து வருகிறோம், அதுபோன்று நீர் செல்லும் வழித்தடங்களையும் அழித்து வருகிறோம், இவைகளை நாம் அளிக்கும்போது நமது இளைய சந்ததியினரையும் அழித்து வருகிறோம் என்பது நமக்குத் தெரியாத ஒன்றாக இருக்கிறது, ஒரு கட்டத்தில் நம்மிடம் பொருள் இருக்கும், பணம் இருக்கும், ஆனால் உன்ன உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை இவைகள் நம்மிடம் இருக்காது, இதற்காக நாம் வெளிமாநிலங்களை தேடி செல்ல வேண்டிய நிலை இருக்கும், ஆகவே ஒவ்வொருவரும் நாம் மரக்கன்றுகளை நட்டு, இயற்கைகளை காக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என இவ்வாறு பேசினார், இன்னும் சிலர் பேசும்போது மரங்களை பணம் சம்பாதிக்கும் நோக்கோடு அழித்து வருகிறோமே தவிர, என்றாவது ஒரு மரக்கன்றுகளை நட்டுவோமா? என கேள்வி எழுப்பினர், மேலும் தங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு விவசாயம் சார்ந்த உழைப்பு என்றால் என்னவென்று தெரியாத விந்தையாக இருக்கிறது, எனது வீட்டு பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் நான் சேர்த்து இருக்கிறேன், ஆனால் உழைப்பைப் பற்றி சொல்லிக் கொடுத்தது இல்லை, ஆதலால் பள்ளி விடுமுறை நாட்களில் விவசாயத்தில் கால் வைத்தால் மட்டுமே, மதிய உணவு என்கின்ற நிலையோடு விவசாயத்தை உணர்த்தி வருகிறேன் என தெரிவித்தார், இதில் கலந்துகொண்ட பள்ளத்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் பசலிக்கா ஜான்சி என்பவர் பேசும்போது, இப்பகுதியில் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
அதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றதும், யூகலிப்டஸ் மரங்களை அகற்றி, வளமீட்பு பூங்காவை , உருவாக்கி பள்ளத்தூரின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார், இதில் சிங்கம்புணரி நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சோலை வளத்தான், மின்வாரிய உதவி கணக்கு அலுவலர் சின்னச்சாமி என்கின்ற சந்துரு, உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஹேமமாலினி, மற்றும் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சரோஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



0 Comments